இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ராவில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் இல்லலையென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூகம்பத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடலோரப் பகுதிகளும் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.




















