நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படவுள்ள 2 மணித்தியாலம் 45 நிமிட மின்வெட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 6 மணி முதல் 10 மணி வரையிலும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
நுரைச்சோலை லக்விஜயா மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதால் தேசிய மின் கட்டமைப்பு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிலைமையை சீர்செய்ய 4 நாட்கள் வரை எடுக்கலாம்.
இதேவேளை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசியமற்ற மின்சாதனங்களை நிறுத்தி வைக்குமாறு மின்சாரசபை வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளது.




















