ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட உமாச்சந்திரா பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் உள்ள காரணத்தினால் 220 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் கல்விகற்ற 875 பட்டதாரிகளின் விண்ணப்பங்களும், இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக் கழகங்களில் கல்வி கற்ற 110 பட்டதாரிகளின் விண்ணப்பங்களும் உள்ளனர்.
மேலும் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக 261 பட்டதாரிகளின் விண்ணப்பங்களும், ஏனைய காரணங்களுக்காக 40 பட்டதாரிகளின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.