நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றையதினம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நாளையதினம் நடைபெறவுள்ள 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கென நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து அதிகூடிய பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்த வண்ணமே நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளையதினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் அனுமதி வழங்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.