மாத்தறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கையின் ஒன்பதாகவு நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பதவியேற்பார்.
நாளை காலை 9.30 மணிக்கு 9வது நாடாளுமன்றம் கூடும்போது, 11வது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவாகுவார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று கூடியபோது, அடுத்த சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் பதவிகளுக்கு ரஞ்சித் சியாம்பலபிட்டி மற்றும் அங்கஜன் ராமநாதன் பெயர்கள் முன்மொழியப்படும்.