விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராக இருந்த போதும், ஜனநாயக வழியை ஏற்றுக்கொண்டு அரசியல் செய்து வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுவர் போராளியாக விடுதலைப் புலிகளில் இணைந்து பின்னர் ஜனநாயக வழியில் நுழைந்ததாக கூறினார். எனினும், நல்லாட்சி அரசு தன்னை பழிவாங்கியதாக குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தனது கட்சி ஆதரவளிக்கும் என்றார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரிப்பதாக அவர் கூறினார்.
அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்கான தனது முயற்சிகளை சட்டமா அதிபர் தடுக்கிறார் என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்ள நீதிமன்ற ஒப்புதல் தேவைப்படுவதாகவும் பிள்ளையான் கூறினார்.


















