ஈரான் நாட்டு மீன்பிடி படகுகள் மீது ஐக்கிய அரபு அமீரக கடற்படைக் கப்பல்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஈரானிய மீனவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானுக்கு நெருக்கமான நட்புநாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் இருந்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் நீண்டகால பொருளாதார தொடர்புகள் உள்ளன, மேலும் எமிரேட்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஈரானிய வெளிநாட்டவர் சமூகத்தின் தாயகமாகவும் இருந்துவருகிறது. கடந்த ஆண்டு, ஈரான் கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்கும் நோக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கடலோர காவல்படை குழுவைப் பெற்றது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது.
மத்தியக்கிழக்கு நாடுகளில் ஈரானில் மிக முக்கிய எதிரிகளாக சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் இருந்து வருகின்றன. இதனிடையே அமெரிக்காவின் தலையீட்டின் கீழ் தற்போது இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் கை கோர்த்துள்ளது, ஈரான் மற்றும் பாலஸ்தீன மக்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ஈரான் அதிபர் ஹசன் ரவுஹாணி, இஸ்ரேலிடன் கை கோர்த்ததற்கு ஐக்கிய அரபு அமீரகம் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பங்கிரங்கமாக அறிவித்தார். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் வெறுப்பை துண்டியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஈரானிய மீன் பிடி படகுகள் மீது ஐக்கிய அரபு அமீரகக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஈரானிய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஐக்கிய அரபு எமிரேட் கடலோரக் கப்பல்கள் “பல ஈரானிய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து எமிராட்டின் கப்பல் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கடலோர காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது, ஏனெனில் அது எங்கள் கடலில் சட்டவிரோதமாக பயணம் செய்தது, அதன் குழுவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், எந்தவொரு சேதத்திற்கும் இழப்பீடு வழங்க தனது விருப்பத்தை அறிவித்ததாகவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




















