சுவையான மாம்பழ லஸ்ஸி தயார் செய்யும் முறையை இதில் காண்போம்.
பெரும்பாலானோருக்கு பிடித்த பழங்களில் ஒன்று மாம்பழம். அதன் சுவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதனை அப்படியே சாப்பிட்டு சலித்து போனவர்கள், ஜூஸ், லஸ்ஸி என விதவிதமாக தயாரித்து சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியது. இவற்றை தயார் செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும். மாம்பழம் வைத்து லஸ்ஸி தயாரித்தால் இன்னும் சுவையாக இருக்கும். தயிர் கலந்து இந்த லஸ்ஸியை தயாரிக்கலாம். இந்த சுவை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பால் கலந்து கொள்ளுங்கள். இதனை எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
2 மாம்பழம்
1 கப் தயிர்
1 தேக்கரண்டி தேன்
2 தேக்கரண்டி பிஸ்தா
குங்குமப்பூ (தேவையான அளவு)
அரை கப் ஐஸ் கட்டிகள்
செய்முறை:
முதலில் மாம்பழத்தை தோல் உரித்து நறுக்கிய பிறகு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் தேன் மற்றும் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும். இதில் குங்குமப்பூ மற்றும் தூளாக்கப்பட்ட பிஸ்தாக்கள் சேர்த்து அலங்கரிக்கவும்.
இந்த லஸ்ஸி கட்டியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.




















