இந்தோனேஷியாவின் பண்டா கடலில் 6.9 மெக்னடியுட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று காலை 10 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையத்தின் சுனாமி எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பிரிவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளளார்.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவிற்கு அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 6.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















