அரச மற்றும் இணை நிறுவனங்களின் உற்பத்திகளை ஒரே இடத்தில் கொள்வனவு செய்யக்கூடிய வகையில், வர்த்தக வலைப்பின்னலை உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், ரஜவாசல என்ற பெயரில் வர்த்தக நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு வணிக அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மக்கள் ஒரே கூரையின் கீழ், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுப்பது திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
முதற் கட்டத்தின் கீழ், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலும், நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலும் ரஜவாசல வர்த்தக நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.


















