ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இதேவேளை, ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வு நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை பிரகட உரையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.