இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2941ஆக உயர்ந்துள்து. நேற்று மாத்திரம் 23பேர் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.
இதில் 18பேர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்தவர்கள். ஒருவர் இந்தோனேசியாவிலும் ஒருவர் குவைத்திலும் இருந்து வந்தவர்கள்.
சென்னையில் இருந்து வந்த இருவரும், துருக்கியில் இருந்து வந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில் வைத்தியசாலைகளில் 141பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 2789ஆக உயர்ந்துள்ளது.