கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை மருத்துவர் எலியந்த வைட்டின் உதவியைப் பெற இந்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, அவரை அழைத்துச் செல்ல அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேஷ விமானம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஒப்புதலுடன், டாக்டர் எலியந்த வைட் இந்தியாவுக்கு தேவையான ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் எலியந்த வைட் ஏற்கனவே இந்திய அதிகாரிகளுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய தகவலின்படி , டாக்டர் எலியந்தா வைட் அவர்களின் உதவியைப் பெற இந்தியாவுக்கு அழைத்து செல்ல கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.
டாக்டர் எலியந்த இந்தியாவில் இருந்து வருகை தரும் ஒரு சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார், அதே விமானத்தில் இந்திய அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடலை நடத்துவார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, டாக்டர் எலியந்த வைட், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பிலான நடைமுறையை எவ்வாறு செய்ய முடியும் என்பதை விளக்குவார்.
அதன் பிறகு, டாக்டர் வைட் இலங்கைக்கு திரும்பவுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாதுகாப்புப் படைகள் எவ்வாறு செயல்பட்டன என்பதற்கான உதாரணத்தை பின்பற்றுமாறு டாக்டர் எலியந்த வைட் ஏற்கனவே இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் எலியந்தா வைட் ஒரு கிருமி நீக்கம் செய்யப்பட்ட விமானத்தில் இந்தியாவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வகையில் இந்தியா செல்லவுள்ளார்.
முந்தைய பல சந்தர்ப்பங்களில், டாக்டர் எலியந்த வைட் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கலைஞர்கள் உட்பட பல இந்தியர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
உலகின் எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாத அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஏற்பட்ட காயத்தை டாக்டர் எலியந்த வைட் குணப்படுத்தினார்.
டாக்டர் எலியந்த வைட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மருத்துவராகவும், தற்போது 13 உலகத் தலைவர்களின் மருத்துவராகவும் உள்ளார்.