ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் கொரோனா தொற்றினால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
41 அகவையைக்கொண்ட இந்தியாவில் இருந்து தொற்றுடன் வந்த பெண் ஒருவரே தொற்று நோய் எதிர்ப்பு மருத்துவமனையில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதுடன் இருதய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.