அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் அந்த படுபாதக செயலின் சூத்திரதாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும் வகையிலும் தனி நீதிமன்றம் அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது கோட்டாபய அரசு.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இது தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்கண்ட முடிவை தெரிவித்தார்.
தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற சில விடயங்களைத் தொடர்ந்தும் மறைத்து வைக்க முடியாது. அவை மிகவும் முக்கியமான காரணிகளாகும்.
சிறுவர்கள் சிறு பருவத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களுக்கு முகங் கொடுப்பார்களாயின் அதனால் ஏற்படும் பாதிப்பு அவர்களது வாழ் நாள் முழுவதும் பாதிக்கும்.
எனவே, இதுபோன்ற விடயங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது எமக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை ஆராய்ந்து அவற்றை உருவாக்க முடியும்.
குறித்த சம்பவம் தொடர்பாக அமைச்சரவையின் அனுமதியுடன் சிறுவர் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.