இந்தியாவில் கணவர் தன்னுடன் எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல், அதீத அன்புடன் இருப்பதால், அவரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின், சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்த 18 மாதங்களிலே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கணவர் தன்னுடன் எந்த ஒரு தகராறும் செய்யாமல், மிகுந்த அன்புடன், அக்கறையுடன் பார்த்து கொள்கிறார்.
அளவுக்கதிகமாக நேசிப்பதை, என்னால் ஏற்க முடியவில்லை. என் கணவருடன் வாழ்ந்த, 18 மாதங்களில், அவர் என்னுடன் சண்டையிட்டதே இல்லை. என் தவறுகளை மன்னிப்பதுடன், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், எனக்கு உதவுகிறார்.
என் செயல்களை, குறை சொல்லாமல் ஏற்றுக்கொள்வதை, என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
கணவருடன் சண்டை போட வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவில்லை. அனைத்தையும் ஏற்கும் அவருடன், வாழ விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த போது, கணவர் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அவளுக்கு, சிறந்த கணவராக இருக்கவே விரும்புகிறேன்.
இதனால் மனுவை திரும்ப பெறும்படி, மனைவியிடம் கூற வேண்டும் என, நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரும் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணும்படி உத்தரவிட்டுள்ளது.
தற்போது இருக்கும் காலத்தில் ஏராளமான பெண்கள் கணவர் என்ன அப்படி கொடுமைப்படுத்துகிறார்? இப்படி கொடுமைப் படுத்துகிறார் என்று தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அனைத்து ஆண்களும் அப்படி இல்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு என்று கூறலாம்.