கனடாவில் கொரோனாவின் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற தவறி நடத்தப்பட்ட பார்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், 2300 டொலர் அபரதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், அதன் பின் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இதையடுத்து கொரோனாவின் பாதிப்பு ஒரு சில நாடுகளில் குறைவது போன்று காணப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது.
இதன் காரணமாகவே கொரோனாவின் இரண்டாவது அலை வீசிவிடக் கூடாது என்பதற்காக கனடாவில் முக்கிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி அந்த விதிமுறைகளை மீறினால் பொலிசாருக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கொரோனாவின் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற தவறி, கடந்த வெள்ளிக் கிழமை விக்டோரியாவில் நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் சுமார் 40 முதல் 60 பேர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, எந்த ஒரு சமூக தொலைதூர விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை.
அனைவரும் ஒரே அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விதிமுறைகளை மீறியதற்காக, விக்டோரிய பொலிசார் 2,300 டொலர் அபராதம் விதித்துள்ளனர். பொருளாதார தடைகளின் கீழ் விதிக்கப்பட்ட முதல் அபராதம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.