அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பலிசேட்ஸ் மற்றும் ஈடன் ஃபயர் பகுதிகளில் இன்று(10.01.2025) ஊரடங்கு நடைமுறையில் இருப்பதோடு இந்த சமயத்தில் கொள்ளைகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக 300,000 பேர் வரை அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் 10,000இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், அமெரிக்க வரலாற்றிலேயே ஏற்பட்ட பெரிய காட்டுத் தீ இது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றைய நிலவரப்படி, இந்த காட்டுத் தீயினால் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காட்டுத் தீ பரவும் இடங்களில் கலிபோர்னியா மாநிலம் முக்கியமான பகுதியாக உள்ளது.
ஒரே மாதத்தில் மட்டும் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் காட்டுத் தீ பரவக்கூடிய ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.




















