தமிழகத்தில் மனைவி மற்றும் மகன் மீது கணவன் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர் மாரியப்பன் (52). இவருக்கு ராதிகா(36) என்ற மனைவியும், ரோகித்(14) மற்றும் கீர்த்திவாசன்(8) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
கூலித் தொழிலாளியான மாரியப்பன் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் காரணமாக சரியான வேலை கிடைக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மாரியப்பன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து மாரியப்பன் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது குடிசை வீட்டின் எதிரே பாயில் படுத்திருந்த மனைவி, மகன் கீர்த்திவாசன் இருவரின் தலையிலும் கல்லைப் போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து மகன் ரோகித்துடன் தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசர், இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரியப்பன் வலை வீசி தேடி வருகின்றனர்.
மாரியப்பன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.