16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு நபர்களை கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனை உணவு வழங்குவதாக தெரிவித்து, வான் ஒன்றில் ஏற்றி சந்தேகநபர்கள் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, குறித்த சிறுவனை 63 மற்றும் 54 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களால் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமான குறித்த இரண்டு சந்தேகநபர்களும் தங்கள் மனைவியை பிரிந்து, மகா-இங்கிரிய மற்றும் ஒருகம பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ பரிசோதனைக்காக ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.