கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற நான்கு மோசமான குற்றவாளிகளை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று (23) கைது செய்துள்ளது. சி.ஐ.டிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் நீதிமன்ற வழக்குகளைத் தவிர்ப்பதற்காக துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர்களிடமிருந்து 9,797,000 இலட்சம் ரூபா மற்றும் 7,900 அமெரிக்க டொலர் கைப்பற்றப்பட்டுள்ளது.
30, 32, 43 மற்றும் 45 வயதான சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் மோதரை பகுதிகளை சேர்ந்தவர்கள். சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


















