பலூன் போல தன் வயிறு வீங்கிக்கொண்டே சென்றதால் கால்களும் வீங்கி நடக்க முடியாத நிலைமைக்கு சென்ற பெண் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டில்லியைச் சேர்ந்த அந்த 52 வயது பெண்ணை சோதித்த மருத்துவர்கள், அவரது கர்ப்பப்பையில் பிரமாண்ட கட்டி ஒன்று வளர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
அவரது எடை 108 கிலோவாக உயர்ந்திருந்த நிலையில், அந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியது மருத்துவர் அருண் பிரசாத் தலைமையிலான மருத்துவர் குழு.
அந்த கட்டி மட்டுமே 50 கிலோ எடை இருந்தது. 30 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியும், தன் அனுபவத்தில் இதற்கு முன் இவ்வளவு பெரிய கட்டியைக் கண்டதில்லை என்கிறார் மருத்துவர் அருண் பிரசாத்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவ்வளவு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஒரே நாளில், இன்று வீட்டுக்குத் திரும்ப இருக்கிறார் அந்த பெண்!