15 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மற்றும் தவறான சிகிச்சையளித்த குற்றச்சாட்டில் மூவரை திங்கள்கிழமை (24) மாதம்பை பொலிசார் கைது செய்தனர்.
குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக அவரது மாமா கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கோஹொம்பவத்த, மணக்குளம் பகுதியைச் சேர்ந்த 58 மற்றும் 35 வயது பெண்கள் மற்றும் 42 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் தனித்தனியாக வாழ்ந்ததாகவும், அவரது பாட்டியின் பராமரிப்பில் மாணவியும் இரண்டு தங்கைகளுக்கும் வாழ்ந்து வந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்ட போதிலும் மாணவியின் தாயும் பாட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதால், மாணவி பொலிசாரிடம் முறையிட்டார்.
மாதம்பை காவல்துறையின் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம் ஆரம்பித்த விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


















