தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால், கணவன் மீது புகார் அளித்த மனைவி போலீஸ் ஸ்டேஷன் முன்பே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இருக்கும் நாடார் பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், பழ கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு இரு குழந்தைகளும், ஒரு மனைவியும் இருக்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சித்ராவுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. வியாபாரம் விஷயமாக அடிக்கடி நிகழ்ந்த சந்திப்பு, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஏற்கனவே 2 திருமணம் செய்திருந்த சித்ராவை ,முருகன் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். சித்ராவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகளோடு சித்ராவை தனது முதல் மனைவி இருக்கும் வீட்டிற்கு அருகிலேயே அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், சித்ரா காவல்நிலையத்தில் முருகன் மீது தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகன் சித்ரா மற்றும் சித்ராவின் மகள் ஆகியோரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அப்போது, முருகனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்ப மகளுடன் வெளியே வந்த சித்ராவை வெறிகொண்டு முருகன் கத்தியால் குத்தியுள்ளார். சித்ராவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.



















