கொரோனா வைரஸ் ஊரடங்கு ஆண்கள் பலரும் தலைமுடியை வழக்கத்தை விட நீளமாக வளரச்செய்தாலும், வியட்நாமின் நிகியான் வான் சியன் என்ற முதியவருடன் யாரும் ஒப்பிட முடியாது அளவிற்கு தனது முடியை வளர்த்து வைத்துள்ளார்.
வியட்நாமில் முதியவர் ஒருவர் 16 அடி நீளத்துக்கு தலைமுடி வளர்த்துள்ளார். மெகாங் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் பெயர் நிகியான் வான் சியன் 92 வயதாகும் அவர் கிட்டத்தட்ட சுமார் 80 ஆண்டுகளாக தனது முடியை வெட்டாமல் உள்ளார்.

இதனால் தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது. மிக நீளமான அந்த முடியை சுருட்டி தனது தலையை சுற்றி முதியவர் சியான் கட்டியுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள அந்த முதியவர் “நான் என் தலைமுடியை வெட்டினால், இறந்துவிடுவேன் என்று நான் நம்புகிறேன், அதனால் சீப்பு வைத்து கூட முடியை சீவியது இல்லை” என கூறினார்.

“நான் என் தலைமுடியைத் தொட்டேன், ஒரே இரவில், அது மிகவும் கடினமாகிவிட்டது. இது என் தலையில் இணைக்கப்பட்டு அதன் சொந்த விஷயமாகிவிட்டது.”
சியனின் ஐந்தாவது மகன் லூம் தான், தன் தந்தையின் 16 அடி நீள தலைமுடியை நிர்வகிக்க உதவுகிறார்.




















