15 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் அவரை கைவிட்டு தப்பியோடிய இளைஞரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (என்சிபிஏ) கைது செய்துள்ளது.
பெற்றோருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சிறுமி கடந்த 2019 ஜூன் மாதம் கண்டியில் உள்ள தனது மாமாவின் இல்லத்திற்கு பேருந்தில் பயணித்தபோது குறித்த இளைஞரை சந்தித்ததாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இளைஞர் சிறுமியை டெல்கொடாவுக்கு அழைத்து வந்தார், அங்கு அவர்கள் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.
அதன்பின்னர் கோட்டை பஸ் நிலையத்தில் இளைஞரால் கைவிடப்பட்ட சிறுமி, குழந்தை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை மருத்துவர்கள் சிறுவர் அதிகார சபைக்கு தகவல் கொடுத்தனர், அதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
இளைஞனின் கைபேசி எண் மூலம் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் கோயிலில் உள்ள ஒரு பழக் கடையில் அவர் பணியாற்றுவதாகவும் அவருக்கு வயது 22 வயது எனவும் அடையாளம் காணப்பட்டார்.
அவரை கைது செய்ய அதிகாரிகள் சென்றபோது அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் பின்னர் அவர் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.