பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் மேல் தாண்டியுள்ள நிலையில், தலைநகர் பாரிசை ஐரோப்பிய நாடு ஒன்று சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் கணக்கின் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி அவசியம் போன்ற பல புதிய விதிகளையும் கொண்டு வந்துள்ளது.

பிரான்சிலிருந்து, குறிப்பாக பாரிசில் இருந்து நாடு திரும்புபவர்களிற்கும், இங்கிருந்து பெல்ஜியம் செல்பவர்களுக்கும் கட்டாய கொரோனாப் பரிசோதனையும், தனிமைப்படுத்தலும் செய்யப்பபோவதாகவும் அறிவித்துள்ளது.
பாரிஸ் நகரத்துடன், Seine-Saint-Denis, Val-de-Marne, Sarthe, Hérault, Alpes-Maritimes, Bouches-du-Rhône, Guyane française, Mayotte ஆகியவற்றில் இருந்து வருபவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் பெல்ஜியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.