அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரச துறைக்கான ஊழியர் தொகையை அதிகரிப்பதோடு அவற்றை செயற்திறன் மிக்கதாக மாற்ற வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
நாட்டின் எதிர்காலத்திற்காக பொருளாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
இதற்கு எமது முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.



















