அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பெண் பட்டுப் புடவையுடன் காணப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் சுதா சுந்தரி நாராயணன் அந்த நாட்டு குடியுரிமையை அதிபர் டிரம்ப்பிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுதா சுந்தரி நாராயணன், இந்தியாவின் கலாசாரமான பட்டுச் சேலை அணிந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியா, லெபனான், கானா, பொலிவியா மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சுதா சுந்தரி நாராயணனுக்கு அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், சுதா சுந்தரியின் சிந்தனைகள், யோசனைகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கும்.
அவர் மிகவும் திறமையான சாப்ட்வேர் என்ஜினியர் என்று புகழ்ந்தார். அத்துடன் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றிருப்பதால் இந்த நாட்டின் சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.