இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தாய் உயிரை காப்பாற்ற சமயோசிதமாக செயல்பட்டு வந்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜோஷ் என்ற அந்த சிறுவனின் அம்மா வீட்டில் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது வீட்டில் இருந்தது ஜோஷும் அவரது சகோதரரும் மட்டும் தான் இருந்தனர்.
உடனே அச்சிறுவன் ஜோஷ் தனது பொம்மை ஆம்புலன்சில் ஐரோப்பாவில் அவசரகால சேவைகளுக்கான தொடர்பு எண்ணை கவனித்து 112-க்கு போன் செய்துள்ளான்.
ஜோஷ் நேரத்தையும் வீணாக்காமல் ஆம்புலன்சை அழைத்தால் அவரது தாய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவியது.
இந்நிலையில் இச்செயலுக்கு அச்சிறுவனை டெல்ஃபோர்டு உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிம் பேக்கர் வியந்து பாராட்டியுள்ளார்.
அவர், இந்த வயதில் இவ்வளவு மனத்தைரியம் உண்மையில் அசாதாரணமானது. எதிர்காலத்தில் ஜோஷ் ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.
இந்த சிறுவனின் சமயோசித செயலை பார்த்து இணையத்தில் பலரும் ஹீரோவாக புகழ்கின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தை கடந்த மாதம் நடந்ததாக இங்கிலாந்தின் வெஸ்ட் மெர்சியா காவல்துறை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.