மஹியங்கணை, வெவட்ட பகுதியில் தனியாக வசித்து வந்த 72 வயது மூதாட்டி, இனம்தெரியாத மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பாட்டியை பலாத்காரம் செய்த காமுகன் அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மஹியங்கணை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) நள்ளிரவில் ஜன்னல் வழியாக சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தூக்கத்திலேயே கட்டிலில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
மூதாட்டி மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.