கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தீவிரமாக போராடி வரும் நிலையில் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் தற்போது வரை 58,67,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,80,824 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் அறிவித்த ரஷ்யா, தற்போது இரண்டாவது தடுப்பூசியையும் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
அதேசமயம் தடுப்பூசியை முதலில் பெற உலக நாடுகள் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுப்பூசி மூலம் அழிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
குறுகிய நேரத்தில் தடுப்பூசியை தயாரிக்க அமெரிக்காவின் விஞ்ஞான மேதைகளை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி எங்களிடம் இருக்கும், மேலும் நாங்கள் வைரஸை அழிப்போம் என்று டிரம்ப் கூறினார்.