கற்பிட்டி – வெள்ளந்தீவு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1400 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றையதினம் குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 43 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில், கடல் மார்க்கமாக ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.
இதன்போது 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சொகுசு கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.