போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 காவல்துறையினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை செப்டம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் தொற்று பயம் காரணமாக அவர்கள் 13 பேரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படும் உதார சம்பத் என்ற போதைவஸ்து கடத்தல்காரரையும் இந்த வழக்கில் 14வது சந்தேகநபராக பெயரிடவேண்டும் என்று பிரதி மன்றாடியார் நாயகம் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரை இந்த வழக்கின் 14வது சந்தேகநபராக பெயரிட அனுமதித்தது.



















