ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த வழிபாட்டு நிகழ்வானது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது .
நாடளாவிய ரீதியில் இன்றையதினம்ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.