போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய பெண்ணாக கருதப்பட்டு வந்த குடு சாந்தா என்ற தினேஷா சந்தமாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – பாலத்துறை பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 25கிராம் ஹெரோயின் மற்றும் 10 கைத்தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை 300 கிராம் ஹெரோயின் சகிதம் 43 அகவைக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு தலுவாகொதுவ பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


















