அமெரிக்காவில் 17 வயது சிறுவன் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவன் இதயத்தில் தையல் ஊசி சிக்கியிருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Massachusetts-ஐ சேர்ந்த 17 வயது சிறுவன் மூன்று நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளான்.
இதற்கு மேலும் பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறான். அங்கு சிறுவனுக்கு electrocardiogram மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் கண்ட காட்சி மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் 3.5- செண்டிமீட்டர் கொண்ட தையல் ஊசி சிறுவனின் இதயத்தில் சிக்கி கொண்டிருந்தது.
அதாவது இதயத்தின் ventricle பகுதியில் தான் ஊசி இருந்தது. இரத்தமானது சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதற்கு ventricle தான் உதவும்.
இதன்பின்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசி வெளியில் எடுக்கப்பட்டது.
தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையில் தையல் பணி செய்யும் போது தனக்கு தெரியாமலேயே சிறுவன் ஊசியை விழுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.