ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தலைவர் வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சியின் மத்தியசெயற்குழு உறுப்பினர்கள் சிலருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் கருஜயசூரிய, ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன ஆகிய மூவரில் ஒருவரே செயற்குழுவின் ஒப்புதலுடன் தெரிவு செய்யப்படவுள்ளார். இது தொடர்பில் நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.