நிந்தவூர் ஆலயக்கட்டில் உள்ள ஆற்றை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற வேளையில் ஆற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை மூழ்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தாயும், தந்தையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, காணாமல் போன கணவன் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான முகம்மத் இக்ராம் என்ற குடும்பஸ்தரே நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த இவர் சில நாட்களுக்கு முன் நாடு திரும்பி இருந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளார்.