1973ம் ஆண்டின் 25ம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைப்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, ஆறு மாத காலப்பகுதியில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும், முதல் மாதத்தில் விளையாட்டு அதிகாரிகள் அதற்கான எண்ணக்கருக்களை உருவாக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சர்களினதும் அதிகாரிகளால் இவ்வாறு உருக்கப்படும் எண்ணக்கருக்கள் தொடர்பில் இரண்டு மாதங்களின் பின்னர் கலந்துரையாடல்கள் நடத்தி கூட்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இந்த திருத்தச் சட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் நீதி அமைச்சின் செயலாளர் பிரியந்து மாயாதுன்ன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.