கொரோனா வைரஸ் பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்தமையானது மிகவும் ஆபத்தானதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிலர் அவ்வாறான தொற்று ஒன்றே இல்லாததனை போன்று செயற்படுவது வருத்தமளிப்பதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று கருத்து வெளியிடும் போதே இராணுவ தளபதி அவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் கொண்டு சென்ற புதிய வேலைத்திட்டத்தினால் கொரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்கள் காப்பாற்றப்பட்டனர். எனினும் கொரோனா ஆபத்து முழுமையாக நாட்டில் இல்லாமல் போகவில்லை.
இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்களினால் கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அதன் ஆபத்தை மறக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.