தாய்லாந்து நாட்டில் 100 நாட்களுக்கு பின்னர் மீளவும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றத்திற்காக கடந்த ஓகஸ்ட் 26ம் திகதி வீடியோ ஜாக்கியான ஒருவருக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில் அந்நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு பரிசோதனை செய்வதற்கு முன் 30 பேருடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால், அவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் அவர்கள் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என உறுதியானது.
இதுபற்றி அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு துறை இயக்குனர் ஜெனரல் சுவான்சை வட்டனாயிங்சரோயென்சை கூறும்பொழுது, எங்கள் நாட்டில் 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், உள்ளூர் தொற்றால் பாதிப்பு தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.