வர்த்தகதுறை அமைச்சராக பதவியேற்றமைக்காக இந்திய உயர் ஸ்தானிகர், பந்துல குணவர்தனவுக்கு தனது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலீடுகள் அடிப்படையிலான உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களை அடிப்படையாக கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றினை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தியிருந்தனர்.
முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடனான பொருளாதார பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் அவர்கள் இங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
தற்போதைய சூழ்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அரச தரப்பினரின் தொடர்புகளை நிலைபேறானதாக மாற்றுவதற்கு டிஜிட்டல் கட்டமைப்பினை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் இங்கு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அந்த அடிப்படையில் இருநாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சமூகங்கள் இடையில் குறிப்பிடத்தக்க கலந்துரையாடல்களை நடத்துவதற்குரிய சாத்தியங்களை ஆராய்வதற்கும் அவர்கள் இணங்கியிருந்தனர்.