முட்டையின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை மொத்த விற்பனை விலையாக 19 ரூபா 50 சதம் என்றும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளை முட்டை சில்லறை விலையாக 21 ரூபா என்றும், சிவப்பு முட்டை சில்லரை விலையாக 22 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் இப்புதிய விலை அமுலில் இருக்கும்.
முன்னதாக, இலங்கையில் கோழி முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
உள்நாட்டு சந்தையில் கோழி முட்டையின் விலையில் பாரியளவில் அதிகரித்துள்ளது. 23 – 28 ரூபா வரையான விலையில் கோழி முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமைய முட்டையின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


















