நேற்று தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர், ஹெரோயின் கடத்தலில் தேடப்பட்டபோது தப்பியோடியவர் என கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்புகஸ்கந்தையில் 23 கிலோகிராம் ஹெரோயின் கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் தேடப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளே, தென்னிந்தியாவில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் இராமமேஸ்வர கரையில் கைது செய்யப்பட்ட செய்தி நேற்று வெளியாகியிருந்தது.
சப்புகஸ்கந்தையில் 23 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தப்பியோடி பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரன் ஆவார்.
மீகாவத்த பொலிசாருக்கு கிடைத்த உதவிக்குறிப்பின் அடிப்படையில் மர ஆலையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக 23 கிலோகிராம் ஹெரோயினை பொலிசார் மீட்டெடுத்திருந்தனர்.



















