நாட்டில் நேற்று கொரோனா தொற்றுடன் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,121 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வந்த மூன்று பேர், பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவர், மற்றும் கந்தக்காடு போதைப்பொருள் பனர்வாழ்வு மையத்திலுள்ள ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,918 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 12 வெளிநாட்டினர் உட்பட 191 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
79 பேர் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.



















