அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்காவுக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்க முடியாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தியா தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியாக இருப்பதே நல்லது. இந்தத் திருத்தத்தின் பிரகாரம் தான் நாடு 9 துண்டுகளாக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.




















