தேசிய வர்த்தகக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின்னரே இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (ETCA) குறித்து புதிய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் தெரிவித்ததாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவருடனான சந்திப்பின் போது, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த இந்திய தூதருக்கு விளக்கமளித்ததாக அமைச்சர் குணவர்தன கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய வர்த்தகக் கொள்கையை வகுக்க வல்லுநர்கள் குழுவை நியமிப்பதற்காக கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியை பெற்றதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தேசிய கொள்கைக்கு உட்பட்டு இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும்,” என்று அவர் கூறினார். கடந்த அரசாங்கம் இந்தியாவுடன் ETCA குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.
இது கொழும்பு மற்றும் புதுடில்லியில் 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது. எனினும், அந்த நேரத்தில் ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு இருந்தது.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்தியாவுடனான ETCAவில் இருந்து எழும் பிரச்சினைகளை தீர்க்க முற்பட்டதாக அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


















