பசில் ராஜபக்ச நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவிக்கு வர எண்ணியிருந்ததால், அதற்கான தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாகவும் தற்போது பதவிக்கு வர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இலங்கையின் குடியுரிமைகளை கொண்டு ஒருவர் அமெரிக்க குடியுரிமைக்கே முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.
அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொள்ளும் வேறு எந்த நாட்டை சேர்ந்த நபராக இருந்தாலும் இது அவர்களுக்கு வழங்கப்படும் விசேட அறிவிப்பு எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.