இலங்கையில் இன்றைய தினம் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனானவர்களின் எண்ணிக்கை 3140 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய எட்டுபேருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 9 கைதிகளுக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2935 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் 193 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



















